Posts

Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -

Image
 Nallur Kandaswamy Kovil -  Declared a Public Temple -  JUDGMENT IN FAVOUR OF Plaintiff Judgment was delivered on Monday last by Mt. J. C. W. Rock,  District Judge, Jaffna, In the well-known Nallur Kandaswamy  Temple case instituted by Mr. C.K. Swaminathas of Nallur and six  others to have the Temple declared a charitable trust under the  Trusts Ordinance. The defendants are the present Manager, Mr.  Ragunatha Mappana Mudaliyar and his mother, Ponnuppillai widow  of the late Mr. Sangarapillai.  The following are excerpts from the interesting judgment which  runs into several closely type written pages:-  This is dispute regarding the Kandaswamy Temple at Nallur. The  issues are concerned not only wish the management of the temple,  but have reference to the origin and purpose of the foundation of  the fabric itself. Several issues have been framed in this ease; and  there are three partied to it.  The -...

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part

Image
 நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part. யாழ்ப்பாணம் திராவிடன் பத்திரிகை 23 - ஜூன் 1929 யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.     இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது 1 குறித்த கோயிலதிகாரி இரு லேககர்களை ஏற்படுதல் வேண்டும். அவர்களுடைய மாச வேதனம் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுக்கப்படும் ..

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4

Image
 ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம் கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும் அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம் நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம் எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன். உமது தகப்பனார் அங்கே இருந்தவரா? மண்டைதீவில் இருந்தவர் உம்முடைய மனைவி பகுதியார் கிரமமாய் கோயிலுக்கு போகிறவரல்லவா ?  ஆம்  மாமனாரும் (பெண் தந்த) ஒரு பிரசித்த நொத்தாரிசாக இருந்தவர் . சங்கரப்பிள்ளை அவர் மூலமாகவே பல உறுதியை முடிப்பித்து இருக்கிறார் சங்கரப்பிள்ளையை உமக்கு நேரே தெரியுமா? ஆம்  இந்த் மாப்பாணர் குடும்பத்தில் உம்முடைய காலத்திலுள்ளவர்களை உமக்கு தெரியுமா? ஆம்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3

Image
 இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை  அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும் அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம் அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று  , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று  மேற்கில் உள்ளதொன்று.  மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது . 50 பரப்பு கொண்டது நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? இல்லை பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? குருக்கள் வளவு  தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? முடியாது

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2

Image
 நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம் நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று  முந்தி சொன்னீரா?  இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை 1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா?  ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -

Image
 நல்லூர் கந்தசாமி கோயில் நிலத்தை வாங்கி அதில் கோயில் கட்டியவர்கள் சாதாரண மக்கள்தான். ஒரு குடும்பம் Don Juan family  (ரகுநாத மாப்பாண முதலியார்)  அதை பிற்காலத்தில் உரிமை கொண்டாடியது தவறு  என்பதுதான் வரலாறு. அதுவும் யாழ்ப்பாணம் டிஸ்ட்ரிக்ட் நீதிமன்றத்தால்  தீர்ப்பு வழங்கப்பட்ட  வரலாறு. யாழ்ப்பாண முத்திரை சந்தையில்தான் இதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நெசவு தொழில் செய்யும் இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வார இறுதி நாட்களில் அந்த முத்திரை சந்தியில் கூடி தாங்கள் நெசவு செய்த துணிக்கு உரிய வரியை செலுத்தி அரசு முத்திரையை பெறுவார்கள். அந்த முத்திரை இல்லாத துணிகளை விற்பது சட்டவிரோதம். நெசவாளர்கள் தங்கள் துணிகளுக்கு அரசு முத்திரை பெறுவதற்காக கூடும் இடமே பிற்காலத்தில் முத்திரை சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதுதான் அந்த இடத்தின் காரணப்பெயர். இங்கு கூடிய நெசவாளர்கள் ஒன்று கூடி அரசு நிலத்தை வாங்கினார்கள். இதன் பெறுமதியான சுமார் பத்து ரூபாயை இவர்களே செலுத்தினார்கள் அதாவது இந்த நிலம் பொதுமக்களால் crowdfunding  வாங்கப்பட்டது. இந்த விடயம் நீதிமன்றத்தில் ...